உடைந்த உலோகப் பகுதிகள் (710)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சின் அங்கிகாரம்

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • மெ.தொ. 1 தொடர்பாக ரூ. 125.00 + VAT வீதம் அறவிடப்படும்
    குறைந்தபட்ச அனுமதிப்பத்திரக் கட்டணம் ரூ. 5,000.00 + பெறுமதி சேர் வரி