இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆனது, இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவதற்கும் பற்று வைப்பதற்கும் பொறுப்பானதாகும். இச்செயற்ப்பாட்டின் போது இத்திணைக்களமானது,

 • ஔடதங்களுக்கான உரிமங்களை வழங்கல்
 • வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கான உரிமங்களை வழங்கல்
 • இரசாயனங்களுக்கான உரிமங்களை வழங்கல்

தொலைத்தொடர்புச்சாதனங்களுக்கான உரிமங்களை வழங்கல்

 • நானாவிதமான பொருட்களுக்கான உரிமங்களை வழங்கல்
 • இறக்குமதி உரிமங்களுக்கான பற்று வைத்தல்
 • இறக்குமதி ஏற்றுமதி உரிமங்களில் திருத்தங்களை செய்தல்
 • ஒழுங்கு விதிகளை வர்த்தமானியிடல்

கட்டாய தரநிலை தேவைப்பாட்டின் அடிப்படையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தால் அடையாளம் காணப்பட்ட பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சம்பந்தமான நிறுவனங்களுடன் திணைக்களம் ஒருங்கிணைக்கின்றது. அத்தகைய விடயங்களுக்குத் தேவையான தரநிலைகளை வெளியிடுவதற்கு இலங்கையின் தரநிலைகள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்றது.

 • இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகளுக்கான வழிக்காட்டல்களை வர்த்தக வங்கிகளுக்கு விநியோகித்தல்
 • அரசாங்கத்தினால் நேரத்திற்கு நேரம் இறக்குமதி ஏற்றுமதி சார்பாக தீர்மானிக்கப்படும் கொள்கை ரீதியிலான ஒழுங்குவிதிகளை தயாரித்து வெளியிடல்
 • இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உதவுதல்
 • வர்த்தக வங்கிகளுக்கும் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இறக்குமதிதொடர்பான கட்டண முறைகளுக்கு வழிவகுத்தல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதற்கான பொதுவான செயல்முறைகள்

உரிமத்திற்கான விண்ணப்ப படிவத்தைப்பெறல்

அலகு

இணையத்தளம் / உரிய அலகு

உரிமம் விநியோகிக்கப்படும் திகதி

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

நேரம்

காலை 8.30 முதல் மாலை 4.15 வரை

விடுமுறைகள்

பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

 

 

விண்ணப்பத்தை சமர்பித்தல் மற்றும் உரிமம் பெறல்

அலகு

உரிய அலகு

உரிமம் விநியோகிக்கப்படும் திகதி

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

நேரம்

காலை 8.30 முதல் மாலை 4.15 வரை

விடுமுறைகள்

பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

 

கொடுப்பனவு

உரிமத்தை பெறுவதற்கான கொடுப்பனவு

அலகு

சிராப்

உரிமம் விநியோகிக்கப்படும் திகதி

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

நேரம்

காலை 8.30 முதல் மாலை 4.15 வரை

விடுமுறைகள்

பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்