நோக்கு

சுபீட்சமான எதிர்காலத்தினை நோக்காக கொண்ட பொதுமக்களினை பாதுகாத்தல்

செயற்பணி

நாட்டின் பாதுகாப்பு, பொருளதாரம், பொதுச்சுகாதாரம், சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு தொடர்ச்சியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் அரசினால் காலத்துக்கு காலம் எடுக்கப்படுகின்ற கொள்கைரீதியான தீர்மானங்கள் 1969 ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கேற்ப அமுல்படுத்தல்.

செயற்பாடுகள்

  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கித்தின் கொள்கையினை அமுல்படுத்துவதற்கு தேவையான ஒழுங்கு விதிளை அமுல்ப்படுத்தல்
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் ஊடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியினை கட்டுப்படுத்தல்
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் தொடர்பான விடயங்களின் போது சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்
  • ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் தெரடர்பான செயற்பாட்டு ஆலேசனைகளை வணிக வங்கிகளுக்கு வெளியிடல்

வெளியீடு

  • 2016 ஆம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதி பத்திரங்கள் 15,498 அளவில் வழங்கியமையின் ஊடாக திணைக்களத்தின் செயற்பணியை நிறைவேற்றுவது தொடர்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டினை மேற்கொள்ளல்.
  • இறக்குமதி அனுமதிப் பத்திரத்திற்கு இணங்க பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவா என உறுதிப்படுத்தல்களை பெற்றுக் கொண்டதன் வரவு வைப்பதன் ஊடாக இறக்குமதி கட்டுப்பாடடினை ஒழுங்குபடுத்தல்.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு கொள்கைகளின் படி அந்நிய செலாவணி வெளிச்செல்லாதிருப்பதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற ஏற்றுமதிகள் தொடர்பாக அனுமதி வழங்குதல்.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளுக்கு இணங்காத சந்தர்ப்பங்கள் தொடர்பில் சுங்கப் பணிப்பாளர் மற்றும் செலாவணிக் கட்டுப்பாட்டாளருக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல்.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் வர்த்தக வங்கிகளுக்கு செயற்பாட்டு ஆலோசனைகளை வழங்குதல்.
  • அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தமையினால் கிடைத்த கட்டணமாக ரூபா 1370 மில்லியன் வருமானம் சேகரிக்கப்பட்டு அரசாங்கத்தின் திரட்டு நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டுள்ளது.