தேவையான ஆவணங்கள்

 • விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
 • உரிய வங்கியினால் வழங்கப்பட்ட கடிதம் அல்லது குறிப்பு
 • வணிக விலைப்பட்டியல்
 • சரக்குப் பட்டியல்
 • நாணயக் கடிதம்

வாகனமொன்றை இறக்குமதி செய்யும் போது, இவற்றுக்கு மேலதிகமாக, பின்வரும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்

 • சரக்குகளை கப்பலேற்ற முன்னரான ஹொலோகிராம் இலச்சினை பொறிக்கப்பட்ட சரக்குப் பரிசோதனைச் சான்றிதழ்
 • வெளிநாட்டு வங்கியின் இலச்சினையுடன் முத்திரையிடப்பட்ட பதிவு இரத்துச் செய்தல் சான்றிதழ்
 • ஒடோமீட்டர் சான்றிதழ்

செயல்முறை

 • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
 • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
 • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
 • பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கொடுப்பனவுகள் - ஒரு வாகனத்திற்கு ரூ. 1,000.00

 • பயன்படுத்திய மோட்டார் வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் கப்பலேற்ற முன்னரான சரக்கு பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பதில் மேலதிகமாக ரூபா. 200,000.00 கட்டணமாக அறவிடப்படும்.