செயற்பாடுகள் கால வரையறை
1. இனங்காணப்பட்ட சரக்குகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை தடுத்தல், கட்டுப்படுத்தல், ஒழுங்குவிதிகளின் திருத்தம் கொண்டு வரல் போன்ற விடயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடல் மற்றும் கால அடிப்படையில் சுங்கத் திணைக்களத்தினால் புதிய சுங்க வகைப்படுத்தல் குறியீடுகளை அறிமுகம் செய்த பின்னர் அனுமதிப் பத்திரம் தேவையான பொருட்கள் தொடர்பில் வர்த்தமான அறிவித்தல்களை வெளியிடல்
2. பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அங்கிகாரத்திற்காக வர்த்தமானி அறிவித்தல்களை சமர்ப்பித்தல்
மாதம் அல்லது அதற்கு மேல்
3. அந்நிய செலவாணி அடிப்படையிலல்லாத இறக்குமதிகளுக்கான அங்கிகாரத்தை வழங்குதல் 20 நிமிடங்கள்
4. வங்கி ஒழுங்குவிதிகள் மீறல் தொடர்பில் வங்கி மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அங்கிகாரம் வழங்குதல் 01 மணித்தியாலம்
5. கொடுப்பனவு முறை தொடர்பான நிபந்தனைகளை மீறியமையின் காரணமாக வங்கியினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஆவணங்களை விடுவிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குதல் 01 மணித்தியாலம்
6. வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிப்பதற்கு இயலாது போகும் சந்தர்ப்பத்தில் முற்கொடுப்பனவுகளை செய்வதற்கான அங்கிகாரத்தை வழங்குதல் 01 வாரம்
7. மீள் ஏற்றுமதிக்கான அங்கிகாரத்தை வழங்குதல் 01 மணித்தியாலம்
8. (D/A) ஒப்புதலுக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் திறந்த கணக்கு தொடர்பான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரத்தை வழங்குதல் 20 நிமிடங்கள்