வீடு எம்மைப்பற்றி சேவைகள் பிரிவுகள் உரிமங்கள் தரைஇறக்கம் செய்திகளும் நிகழ்வுகளும் FAQ
 
CIE 01 – விண்ணப்பங்கள்
CIE 02 – விண்ணப்பங்கள
CIE 03 – விண்ணப்பங்கள
 
 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - FAQ
CIE 01 – விண்ணப்பங்கள்

  1. கேள்வி : இந்தத் திட்டத்தின்கீழ் வாகனமொன்றினை இறக்குமதி செய்ய எவர் தகுதியுடையவர்?

    பதில் : வெளிநாட்டிற்குச் சென்று அந்நியச்செலாவணியை சம்பாதித்துக் கொண்டுள்ள இலங்கையர்


  2. கேள்வி : இந்தத்திட்டத்தின்கீழ் எத்தகைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படலாம்?

    பதில் : 10 வருடங்களுக்கு மேற்படாத பழைமையான கார்கள், ஜீப் வண்டிகள், வான்கள் அல்லது வாடகை வண்டிகள்;.


  3. கேள்வி : விண்ணப்பதாரியினால் பூர்த்திசெய்யப்படவேண்டிய ஏனைய தேவைப்பாடுகள் எவை?

    பதில் : சம்பந்தப்பட்ட வாகனமானது 5 வருடங்களுக்குக் குறைவான பழைமையைக் கொண்டிருக்குமாயின் அவ்வாகனமானது விண்ணப்பதாரியினால் குறைந்தது ஒரு வருடத்திற்காயினும் பதிவு செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். வாகனமானது 5-10 வருட கால பழமையைக் கொண்டிருக்குமாயின், அவ்வாகனமானது விண்ணப்பதாரியினால் குறைந்தது 3 வருடத்திற்காயினும் விண்ணப்பதாரியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.


  4. கேள்வி : இந்தத் திட்டத்தின்கீழ் இறக்குமதியாளர்களினால் அடையப்படும் நன்மை என்ன?

    பதில் : நல்ல நிலையிலுள்ள, பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றைக் குறைந்த விலைக்கு வாங்கி உமது தாய்நாட்டிற்குத் திரும்பும்போது அதனை இறக்குமதி செய்துகொள்ளவும் முடியும்.


  5. கேள்வி : இத்திட்டத்தின்கீழ் இறக்குமதி செய்யப்படமுடியாத வாகனங்கள் எவை?

    பதில் : (அ) 10 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான            வாகனங்கள்
            (ஆ) இடது கையினால் செலுத்தப்படுகின்ற வானங்கள்


  6. கேள்வி : நீர் இத்திட்டத்தின்கீழ், ஒரு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு, எவ்வளவு காலத்திற்கு தகுதியுடையவராயிருப்பீர்?

    பதில் : ஐந்து வருடங்களுக்கு ஒரு தடைவ நீர் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்யத் தகுதியுடையவராக இருப்பீர்.


  7. கேள்வி : இந்தத் திட்டத்தின்கீழ், வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக, சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள் எவை?

    பதில் : பின்வரும் ஆவணங்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களத்தின் அலகு 02 இற்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

        அ. முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட CIE 06 படிவம்.

        ஆ. வாகனத்தின் இரு புகைப்படங்கள் (இரு பரிமாணங்கள்).

        இ. விண்ணப்பதாரியின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டிருத்தலை உறுதிப்படுத்தும் பதிவுச் சான்றிதழ். (பதிவுச் சான்றிதழ்)

        ஈ. விண்ணப்பதாரி அந்நியச்செலாவணியை சம்பாதித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான வங்கிக் கூற்றுக்கள்.

        உ. கடவுச்சீட்டின் வீசா பக்கங்களின் பிரதிகள், விண்ணப்பதாரியின் புகைப்படத்தைக் கொண்ட பக்கத்தின் பிரதி மற்றும் நாட்டிலிருந்து வெளியேற்றலை, நாட்டினை வந்தடைதலைக் காட்டும் புறக்குறிப்புப் பக்கத்தின் பிரதி.

        ஊ. வாகன மேற்பார்வையாளரின் சான்றிதழ்

* உரிமக் கட்டணங்கள் பின்வருமாறு அறவிடப்படுகின்றன.

வாகனத்தின் வயது (வருடங்கள்) உரிமக் கட்டணம்
(CIF பெறுமதியின்மீது)
3 ½ 03%
5-7 05%
7-8 07%
8-9 09%
9-10 12%

CIE 02 – விண்ணப்பங்கள

  1. கேள்வி : வாகனமானது எவருக்கு கொடையாக வழங்கப்படமுடியும்?

    பதில் : வெளிநாட்டில் தொழில்புரியும் ஒரு நபரினால், இந்த நாட்டில் வசிக்கின்ற அவரது தாய்க்கு, தந்தைக்கு, சகோதரனுக்கு, சகோதரிக்கு, மனைவிக்கு, கணவனுக்கு மற்றும் பிள்ளைகளுக்கு.


  2. கேள்வி : எந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட முடியும்?

    பதில் : 05 வருடங்களுக்கு மேற்படாத பழைமையான கார்கள், ஜீப் வண்டிகள், வான்கள் அல்லது வாடகை வண்டிகள்.

    (இயந்திரக் கொள்வனவு)
      பெற்றோல் டீசல்
    கார் 1800 2300
    ஜீப் வண்டி, வான், வாடகை வண்டி 2800 3000


  3. கேள்வி : இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு இறக்குமதியாளர் எவ்வாறு நன்மையடைய முடியும்?

    பதில் : இலங்கையிலுள்ள உறவினர் ஒருவருக்கு கொடையளிப்பதற்கென, பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றைக் குறைந்த விலைக்கு வாங்குதல்.


  4. கேள்வி : இந்த திட்டத்தின்கீழ் இறக்குமதி செய்யப்படமுடியாத வாகனங்கள் எவை?

    பதில் : (அ) 5 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான வாகனங்கள்
        (ஆ) இடது கையினால் செலுத்தப்படுகின்ற வாகனங்கள்


  5. கேள்வி : நீர் இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு காலத்திற்கு தகுதியுடையவராயிருப்பீர்?

    பதில் : 5 வருடங்களுக்கு ஒரு தடைவ


  6. கேள்வி : இந்த திட்டத்தின்கீழ் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள் எவை?

    பதில்:  பின்வரும் ஆவணங்கள் இறக்குதி மற்றும் ஏற்றுமதி திணைக்களத்தின் அலகு 02 இற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

        அ. முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட CIE 8அ மற்றும் CIE 8ஆ படிவங்கள்
           நன்கொடையளிப்பவர் CIE 8ஆ
           நன்கொடை பெறுபவர் CIE 8அ

        ஆ. இரு பரிமாணங்களில் எடுக்கப்பட்ட வாகனத்தின் இரு புகைப்படங்கள்

        இ. வாகனப் பதிவுச் சான்றிதழின் பிரதி

        ஈ. இலங்கைக்கு பணம் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக, நன்கொடையளிப்பவரின் வெளிநாட்டு சம்பாத்தியம் மற்றும் ஒரு வங்கிக்கூற்றின் சான்றிதழ்.

        உ. நன்கொடையளிப்பவர் வெளிநாட்டில் வாழ்வதனை உறுதிப்படுத்துவதற்காக, நன்கொடையளிப்பவரது கடவுச்சீட்டின் விசா பக்கத்தின் பிரதிகள், நாட்டிலிருந்து வெளியேறலைக் காட்டும் புறக்குறிப்புப் பக்கத்தின் பிரதி மற்றும் கவுச்சீட்டு உரிமையாளரின் புகைப்படத்தைக்கொண்ட பக்கத்தின் பிரதி.

        ஊ. வெளிநாட்டு தொழில் சான்றிதழ்.

        எ. நன்கொடையளிப்பவர் மற்றும் நன்கொடை பெறுபவருக்கிடையிலான உறவு முறையினை உறுதிப்படுத்துவதற்கான தகுந்த ஆவணங்கள்.

        ஏ. வாகனத்தின் தரத்திற்கான ஒரு சான்றிதழ்.

    * வாகனத்தின் CIF பெறுமதியின் 15% உரிமத்தின் கட்டணமாக திணைக்களத்திற்குச் செலுத்தப்படல் வேண்டும்

CIE 03 – விண்ணப்பங்கள

  1. கேள்வி : வாகன நவீனமயமாக்கல் என்பதனால் கருதப்படுவது என்ன?

    பதில் : உமது வாகனத்தின் உடற்பாகம் சிதைவடைந்திருப்பின் புதிய ஒரு உடற்பாகத்தினை வாகனத்தின்மீது இணைத்தல்


  2. கேள்வி : இதற்கான தேவைப்பாடு என்ன?

    பதில் : பின்வரும் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.

        அ. வாகனமானது உமது பெயரில் பதிவு செய்யப்பட்டிருத்தல்        வேண்டும்.

        ஆ. வாகனத்தின் உடற்பாகமானது அதன் அடிச்சட்டத்திலிருந்து        பிரிக்கப்படக்கூடியதாயிருத்தல் வேண்டும்..

        இ. வாகனத்தின் உடற்பாகமானது பயன்படுத்தப்படமுடியாததாய்        இருத்தல் வேண்டும்.

        ஈ. வாகனத்தின் அடிச்சட்டமானது நல்ல நிலையில் இருத்தல்        வேண்டும்.


  3. கேள்வி : மேற்கூறப்பட்ட தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படின், நீர் என்ன செய்வீர்?

    பதில் : பின்வரும் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.

        அ முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட CIE படிவம்- 1 விண்ணப்பம் (Indent)

        ஆ வாகனத்தின் அடிச்சட்டமானது, உடற்பாகத்திலிருந்து பிரிக்கப்படமுடியும் என்பதையும், வாகனத்தின் உடற்பாகம், அடிச்சட்டம் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெரிவிப்பதற்கான ஒரு கூற்றினை விண்ணப்பதாரி செய்தல் வேண்டும்.

        இ விண்ணப்பதாரி தனது கடிதத்தில், வாகனம் எவ்விடத்தில் பரிசோதிக்கப்படலாம் என்பதையும் தனது தொடர்பாடல் இலக்கத்தையும் (தொலைபேசி இல) குறிப்பிடல் வேண்டும்.

       ஈ வாகனத்தின் ஐந்து (5) புகைப்படங்கள் கையளிக்கப்படல் வேண்டும். (வாகனத்தின் நான்கு (4) பக்கங்கள் மற்றும் முன்பக்கத் தோற்றம்)

        உ மோட்டார் வாகன பதிவாளர்களினால் வழங்கப்பட்ட வாகன பதிவுச் சான்றிதழின்மூலப் படிவமும் அதன் ஒரு பிரதியும்.

      ஊ வெளிநாட்டு விநியோகத்தர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட, உமது வாகனத்திற்கான தகுந்த உடற்கவசமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான விபரங்களடங்கிய ஆவணம் மற்றும் இதனுடன் தொடர்பான சேவைக் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான பற்றுச்சீட்டின் பிரதியொன்று.


  4. கேள்வி : உமது வாகனத்திற்கு ஒரு உடற்கவசம் இணைக்கப்படுவது அவசியமா என்பதை நாம் எவ்வாறு தீர்மானிப்போம்?

    பதில் : திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வைச் சபை, வாகனத்தினை பரிசோதித்த பின்னர் இதனைத் தீர்மானிக்கும்.

  5. கேள்வி : வாகனத்தின் அடிச்சட்டமானது, வாகனம் நல்ல நிலையில் இருக்கும்போதே சிதைவடைந்தால்?

    பதில் : மேற்கூறப்பட்ட அதே நடபடிமுறை பின்பற்றப்படவேண்டும்.
 
மேல் ^
 
© 2007 Department of Import and Export Control All Rights Reserved – Developed in Association with ICTA Site By lankaCom