government web site - sri lanka
 வீடு எம்மைப்பற்றி சேவைகள் பிரிவுகள் உரிமங்கள் தரைஇறக்கம் செய்திகளும் நிகழ்வுகளும் FAQ
 
தொலைநோக்கு
“சிறந்த எதிர்காலத்திற்காக, சமுதாயத்தினையும் சூழலையும் பாதுகாத்தல்”
நோக்கு
“இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு இணங்க, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுச் சுகாதாரம், சூழலுடன் தொடர்புபட்டு, அரசாங்கத்தினால் காலத்துக்குக்காலம் மேற்கொள்ளப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தல்”
 

எம்மைப்பற்றி
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களமானது, நாட்டினுள்ளே பொருட்களின் இறக்குமதி மற்றும் நாட்டிலிருந்து பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கச் சட்டத்தினால், ஒரு தனியான திணைக்களமாகத் தாபிக்கப்பட்டது.

அனேகமாக முற்றுமுழுவதுமாக எல்லா இறக்குமதிகளும் ஏற்றுமதிகளும் உரிமத்தின் தேவைப்பாட்டுக்கு அமைவாக இருப்பதால், இந்ந திணைக்களமானது, நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கினை வகிக்கின்றது. இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிக்கான பல வரையறைகள் காணப்படுவதால், இந்த திணைக்களத்தினால் ஆற்றப்படும் வேலையின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.

1977ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் நியதிகளின்படி இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கான பல மட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அன்று தொடக்கம் மருந்துகள், இரசாயனங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், போர்க்கருவிகள், என்பன தவிர்ந்த ஏனைய இறக்குமதி, ஏற்றமதிப் பொருட்களுக்கான உரிமத்துக்கான தேவைப்பாடு நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுமக்களின் சுகாதாரம், சூழல், பொருளாதாரம், பாதுகாப்பு என்பவற்றிற்கு தீங்கு விளைவிக்கத்தக்க வகையிலான, விரும்பத்தகாத இறக்குமதிகளின் பிரவேசத்தை நாட்டினுள்ளே தவிர்க்கும் நோக்கத்துடனே, இந்த மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.
தொலைநோக்கு

“சிறந்த எதிர்காலத்திற்காக, சமுதாயத்தினையும் சூழலையும் பாதுகாத்தல்”

நோக்கு

“இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு இணங்க, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுச் சுகாதாரம், சூழலுடன் தொடர்புபட்டு, அரசாங்கத்தினால் காலத்துக்குக்காலம் மேற்கொள்ளப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தல்”

குறிக்கோள்கள்
  1. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரத்தில் அரசாங்கத்தின் கொள்கையினை நடைமுறைப்படுத்தல்
  2. பொதுமக்களின் வாழ்விற்கு விரும்பத்தகாத பொருட்களின் இறக்குமதியினைத் தவிர்த்தல்
  3. உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களைப் பாதுகாத்தல்.
  4. ஏற்றுமதிப் பொருட்களின் தேசிய அடையாளத்தைப் பாதுகாத்தல்.
  5. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தராதரங்களைப் பேணுதல்.
  6. பொருட்களின் இறக்குமதிக்கான அந்நியச்செலாவணியின் துஷ்பிரயோகத்தைத் தவிர்த்தல்.
பணிகள்
  1. இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் தேவைப்பாடுகளின் கீழ் உரிமங்களை வழங்கல்.
  2. உரிமங்களுக்கான கட்டணங்களின் சேகரிப்பு.
  3. இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் மீதான அரசாங்க கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கு, ஒழுங்குவிதிகளை வெளியிடல்.
  4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் தொடர்பான விடயங்களில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையதிபதி மற்றும் அந்நியச்செலாவணிக் கட்டுப்பாட்டாளர் என்பவர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கல்.
 
ஒழுங்கமைப்பின் கட்டமைப்பு
 
மேல் ^
 
© 2007 Department of Import and Export Control All Rights Reserved – Developed in Association with ICTA Site By lankaCom